Tap to Read ➤

ரூபாய் 1000 உதவித்தொகையுடன் கூடிய அரசின் "புதுமைப்பெண் திட்டம்" !!

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கான தமிக அரசின் புதிய திட்டம் !!
Sidhanathan K
பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கைகள் போன்றோரின் நலனை பாதுகாக்கும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், 05.09.2022 அன்று சென்னை பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில், சமூக நலம் மற்றும் பெண்கள் உரிமைகள் துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் இத்திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் அரசுப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ ரூ.1000 வீதம்‌ உதவித்‌ தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் 8ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு படித்துவிட்டு முதல் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
சான்றிதழ் படிப்பு (Certificate Course), பட்டயப் படிப்பு (Diploma/ITI.,/D.TEd., Courses), இளங்கலைப் பட்டம் (Bachelor Degree - B.A., B.Sc., B.Com., B.B.A, B.C.A., and all Arts & Science, Fine Arts Courses)
தொழில் சார்ந்த படிப்பு (B.E., B.Tech., M.B.B.S., B.D.S. B.Sc., (Agri.), B.V.Sc., B.Fsc., B.L., etc.,) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing, Pharmacy, Medical Lab Technology, Physiotherapy etc.,) போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
இளங்கலை பட்டப்படிப்பு - முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியர்கள், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்
தொழிற்கல்வி - மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்குச் செல்லும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தும்.
மருத்துவக் கல்வி - நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர்.