Tap to Read ➤

வாயுக் கோளாறை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!

வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்கள் குணமாக சில எளிய டிப்ஸ்.
HTML Tamil
இன்றைய பரபரப்பான கால சூழ்நிலையில், பலரையும் வாட்டி வதைக்கும் பிரச்சனை அஜீரணக் கோளாறாகும்.
செரிமானம் ஆகாத உணவுகளை உண்பதால், அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் வயிற்றில் வாயுவை சேர செய்கின்றன. பின்னர் அதுவே வாயு தொல்லையாக மாறுகிறது.
இந்த வாயு தொல்லையை வீட்டில் உள்ள பொருட்கள் மூலம் எளிய முறையில் குணமாக்கலாம்.
வாயுத் தொல்லை நீங்க வெள்ளைப் பூண்டை பசும்பாலில் வேக வைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சீரகம், மிளகு மற்றும் பூண்டு ஆகிவற்றை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து தினமும் அருந்தினால் வாயு தொல்லை நீங்கும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு பெருங்காயம் தூள் சேர்த்து அருந்தி வந்தால் வாயு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
பெருஞ்சீரகம் ஒரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிது புதினா இலையை சேர்ந்து, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து இளம் சூட்டில் குடித்து வந்தால் வாயு தொல்லை சரியாகும்.
வாதநாராயணன் இலையை காய வைத்து பொடி செய்து, 5 கிராம் பொடியை சுடுநீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
முடக்கத்தான் இலையை வேகவைத்து அந்த சாற்றை ரசமாக்கி வாரம் ஒருநாள் உணவோடு சாப்பிட்டால் வாயு தொல்லை அகலும்.
வாயு தொந்தரவு நீங்க ஆரஞ்சுபழ தோல்களை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
காலையில் அருகம்புல் சாறும், இரவில் குப்பைமேனி இலைச் சாற்றையும் குடித்து வந்தால் வாயு தொல்லை நீங்கும்.