Sidhanathan K       Dec 12, 2024

முருங்கை விதை பொடியின் மகத்தான மருத்துவ பயன்கள்..!!

முருங்கை மரத்தின் பூ, காய், விதை, வேர் மற்றும் இலை என அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது. இந்த முருங்கையை ஆண்களின் இயற்கை வயாகரா என்றும் அழைக்கிறார்கள்.

முருங்கை விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், துத்தநாகம், வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது.

முருங்கை விதை இதயத்தை சுற்றியுள்ள கொழுப்பு படிவுகளை அகற்றுவதில் உதவிபுரிகிறது. மேலும், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இந்த முருங்கை விதையை உட்கொள்ளலாம்.

இந்த முருங்கை விதைகளில் உள்ள அதிக ஜிங்க் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி, சர்க்கரை நோயை தடுக்கிறது.

முருங்கை விதைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் பற்களும், எலும்புகளும் பலம் பெரும்.

இந்த முருங்கை விதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி, நன்றாக காய்ந்ததும், அதனை அரைத்து பொடியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

இந்த முருங்கை விதை பொடியை பாலில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை பிரச்சனை குணமாகும். குறிப்பாக, பெண்கள் உணவில் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்த முருங்கை விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சி குடித்தால் தண்ணீர் போன்ற விந்து கெட்டிப்படும். அதேபோல், நரம்புகள் வலுப்பெறும்.