செம்பருத்தியை பொறுத்தவரை, அதன் பூக்கள், விழுதுகள் மற்றும் இலைகள் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவையாகும்.
செம்பருத்தி இலைகள் அஜீரணத்தை போக்கி, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. அதேபோல, வயிறு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் நீக்கி குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, செம்பருத்தி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால், உடல் உஷ்ணத்தால் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்.
கண் எரிச்சல், கண் வீக்கம், கண்களில் நீர் வடிதல், கண்களில் கட்டி போன்ற கண் பிரச்சனைகளுக்கு இந்த தண்ணீர் அருமருந்தாகும்.
அதேபோல, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.
செம்பருத்தி இலைகளை அரைத்து பற்றுபோல பூச புற்றுநோயால் ஏற்பட்ட புண்கள் ஆறிவிடும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த செம்பருத்தி இலைகள் முக சுருக்கங்களை தடுத்து இளமையை தக்கவைக்கிறது.
நரைத்த முடி மற்றும் பொடுகு தொல்லைக்கு செம்பருத்தி இலைகளுடன் சிறிது கறிவேப்பிலை மற்றும் மருதாணி இலைகளை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் முழு பிரச்சனையும் தீரும்.
செம்பருத்தி இலையில் டீ அல்லது கஷாயம் வைத்து குடித்தால் இரத்த அழுத்த பிரச்சனைகள் மெல்ல குறையும்.
இந்த செம்பருத்தி இலை டீயை தொடர்ந்து குடிப்பதால் மாதவிடாய் சீராவதோடு, மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியும் குறையும்.