Tap to Read ➤

விண்ணில் பாய்கிறது 36 செயற்கைகோளுடன் கூடிய GSLV மார்க் 3 ராக்கெட்..!!

இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் பற்றிய சில தகவல்கள்!
Sidhanathan K
இஸ்ரோவின் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் 'ஒன்வெப்' திட்டத்தின் கீழ் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 (Geosynchronous Satellite Launch Vehicle Mark III) ராக்கெட் என்று பெயரிடப்பட்ட ஒரே ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது.
தற்போது எல்.வி.எம். -3 (Launch Vehicle Mark 3 (LVM3) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஏவுதளம் 2ல் இருந்து வரும் 23ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 12.07 மணிக்கு எல்.வி.எம். 3 ராக்கெட்ட் ஏவப்பட உள்ளதாக Oneweb தெரிவித்துள்ளது.
இஸ்ரோ தயாரித்த இந்த எல்.வி. எம். -3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது.
இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோ ஜெனிக் வகை எந்திரங்களில் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்டது.
இந்த ராக்கெட்டில் இரண்டு சாலிட் ஸ்ட்ராப் மோட்டர்கள், ஒரு லிக்விட் பூஸ்டர் உள்ளன.
முதன்முறையாக வணிக ரீதியாக ஏவப்படும் இந்திய ராக்கெட் 6 டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறைந்த புவி சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட உள்ளது.
எல்.வி. எம் - 3 ராக்கெட்டுகள் ஏவப்படும் நிகழ்வு OneWeb இணையதளம், Twitter மற்றும் LinkedIn போன்ற சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.