Tap to Read ➤

உடலை பின்னோக்கி வளைத்து  கின்னஸ் சாதனை !!

உடலை வில்லாய் வளைத்து 14 வயது சிறுமி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
HTML Tamil
லண்டனில் உடலை பின்னோக்கி வளைத்து நடந்து, 14 வயது சிறுமி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த லிபர்ட்டி பாரோஸ் என்ற சிறுமி, தனது உடலை ஸ்பிரிங் போல வளைக்கும் திறமை கொண்டவர்.
14 வயதாகும் லிபர்ட்டி பாரோஸ், சிறு வயதிலிருந்தே படிப்பு மற்றும் விளையாட்டு இரண்டிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.
பல்வேறு ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் லிபர்ட்டி பாரோஸ் குவித்துள்ளார்.
தலையை கால்கள் மற்றும் மார்பு வழியாக தலைக்கு கொண்டு வந்து 30 வினாடிகளில் 10-க்கும் மேற்பட்ட மாற்றங்களை செய்து அசத்துகிறார்.
லிபர்ட்டி பாரோஸ் தனது உடலை, அரை நிமிடத்தில், 11 முறை உடலை வளைத்து, கடந்த அக்டோபர் மாதம் கின்னஸ் சாதனை படைத்தார்.
கின்னஸ் உலக சாதனை தினத்தையொட்டி, லண்டனில் பல்வேறு சாதனையாளர்கள் ஒன்றினைந்து சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் 14 வயதான லிபர்ட்டி பாரோஸ்சும் பங்கேற்று, தனது உடலை முழுவதுமாக பின்னோக்கி வளைத்து சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
உடலை முழுவதுமாக பின்னோக்கி வளைத்து, 22 நொடிகளில் 20 மீட்டர் தூரம் நடந்து அனைவரையும் பிரம்மிக்க வைத்தார்.
இதன் மூலம் மீண்டும் கின்னஸ் சாதனை படைத்து, 14 வயதான லிபர்ட்டி பாரோஸ் அசத்தியுள்ளார்.