Tap to Read ➤

கின்னஸ் சாதனை படைத்த துபாய் ரோலர் கோஸ்டர்

துபாயில் உள்ள 'தி ஸ்டோம் கோஸ்டர்' கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
HTML Tamil
உலகின் அதிவேக ரோலர் கோஸ்டர் என்ற கின்னஸ் சாதனையை, துபாயில் உள்ள 'தி ஸ்டோம் கோஸ்டர்' படைத்துள்ளது.
துபாய் நாட்டின் ஹில்ஸ் மாலில் 'தி ஸ்டோம் கோஸ்டர்' நிறுவப்பட்டுள்ளது.
உலகின் அதிவேக செங்குத்து வடிவிலான ரோலர் கோஸ்டர் என்ற சாதனையை இந்த 'தி ஸ்டோம் கோஸ்டர்' படைத்துள்ளது.
உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ், கின்னஸ் சாதனை நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
கட்டிட உள்ளரங்கில் அமைக்கப்பட்ட 670 மீட்டர் நீளம் கொண்ட பாதையில், இந்த ரோலர் கோஸ்டர் சுற்றி வந்து பயணித்தது.
பிரம்மாண்டமான இந்த ரோலர் கோஸ்டரில் பயணம் செய்பவர்களுக்கு திரில்லிங்கான அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
இந்த பிரமாண்ட ரோலர் கோஸ்டர், கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டது.
கின்னஸ் சாதனை படைத்ததை கொண்டாடும் வகையில், உயரமான புர்ஜ்கஃலீபா கட்டிடத்தில் கண்கவர் ஒளி விளக்குகள் ஜொலித்தன.