Varalakshmi N       Jun 20, 2026

முடி உதிர்வா? இந்த இயற்கை குறிப்புகளை முயற்சிக்கலாம்!

கூந்தலின் ஆரோக்கியம், நம் ஒட்டுமொத்த அழகையும் தன்னம்பிக்கையையும்       அதிகரிக்கிறது.

தினசரி வாழ்க்கையில் எளிதாக பின்பற்றக்கூடிய சில இயற்கை கேச       பராமரிப்பு குறிப்புகள், முடி உதிர்வை குறைத்து கூந்தலை       ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

உப்பு தண்ணீரில் தலைக்குக் குளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்,  தண்ணீரில் சிறிதளவு சோடா உப்பு கலந்து பயன்படுத்தலாம். இது முடி       உதிர்வைக் குறைக்க உதவும்.

ஆலிவ் எண்ணெயை மிதமான சூட்டில் வெதுவெதுப்பாகக் காய்ச்சி, விரல்       நுனிகளால் மயிர்க்கால்களில் மெதுவாக மசாஜ் செய்து வந்தால், கூந்தல் வறட்சி குறைந்து மென்மையாக மாறும்.

வழுக்கை உள்ள பகுதியில் சிறிதளவு மிளகு மற்றும் எலுமிச்சை விதைகளை    சேர்த்து அரைத்து தேய்த்து வந்தால், முடி வளர்ச்சியை ஊக்குவிக்க       உதவும் என கூறப்படுகிறது.

சுத்தமாக சேமித்து வைத்த மழைநீரில் தலைமுடியை அலசினால், முடி       இயற்கையான மினுமினுப்பைப் பெறும்.

முடி உதிர்வைக் கட்டுப்படுத்த, துவரம் பருப்பை இரவில் ஊறவைத்து       மறுநாள் அரைத்து தலைமுடியில் பேக் போலப் பூசி 5 நிமிடங்கள் கழித்து       குளிக்கலாம்.

இயற்கை முறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் போது மட்டுமே நல்ல பலனை அளிக்கும்