Tap to Read ➤

ஏலத்திற்கு வரும் ஹாரி பாட்டரின் கண்ணாடி!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் 'ஹாரி பாட்டர்' ஆகும்.
HTML Tamil
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்றான 'ஹாரி பாட்டர்' படத்தின் முதல் பாகம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது.
மாய உலகில் நடக்கும் விஷயங்களை 'ஹாரி பாட்டர்'  படத்தில் சிறப்பாக காட்டியிருப்பதால், இன்றளவும் இப்படம் தலை சிறந்து விளங்குகிறது.
பிரபல எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டர் புத்தகத்தை மையமாக கொண்டு ஹாரி பாட்டர் திரைப்படம் எடுக்கப்பட்டது.
எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் எழுதிய 7 பாகங்கள், 8 திரைப்படங்களாக வெளியாகி, நல்ல வசூல் சாதனை படைத்தது.
குழந்தைகள் அதிகம் விரும்பும் படமான ஹாரி பாட்டார் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் டேனியல் ராட்டக்ளிஃப்.
ஹாரி பாட்டர் கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் ராட்க்ளிஃப் அணிந்த கண்ணாடி நவம்பர் 11-ம் தேதி ஏலத்திற்கு வருகிறது.
படத்தில் கண்ணாடி அணிந்தபடி நடிப்பதற்காக, டேனியல் ராட்க்ளிஃப்க்கு கிட்டதட்ட 100 கண்ணாடிகள் சோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த 100 கண்ணாடிகளில் 57 கண்ணாடிகள் முதல் பாகமான ஹாரி பாட்டர் அண்ட் தி சர்சரர்ஸ் ஸ்டோன் படத்திற்கு ஆர்டர் செய்யப்பட்டது.
அந்த 57 கண்ணாடிகளில் ஒன்றுதான் தற்போது ஏலத்திற்கு விடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கண்ணாடி 20,000 பிரிட்டிஷ் பவுண்ட் அல்லது 22,000  அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்திற்கு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாரி பாட்டர் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அங்கீகரிக்கும் வகையில், 50 பவுண்ட் 'ஹாரி பாட்டர்' நாணயமும் வெளியிடப்பட்டுள்ளது.