Varalakshmi N       Jul 20, 2023

ஜல நெட்டி (Neti pot) கேள்விப்பட்டு இருக்கீங்களா?

மூக்கு வழியே வைரஸ், பாக்டீரியா தொற்று, தூசி நுழைவது, அல்ர்ஜி,     ஏற்படும்போது, சளி திரவம், நீர்தேங்கி, மூக்கு உரிதல், மூக்கில் நீர்வடிந்து கொண்டே இருத்தல்,

தும்மல், தொடர் தும்மல், இரும்பல்,     ஜலதோஷம், தலைபாரம், முகத்தில் வீக்கம், புருவத்திற்கு இடையே வலி,     மற்றும் குத்துதல் போன்ற உணர்வு

காதடைப்பு போன்ற பல  பிரச்சனைகளை சைனசிடிஸ்  (Sinusitis) என்று சொல்லப்படுகிறது

சைனசிடிஸ் (Sinusitis) பிரச்சனைகளுக்கு     தீர்வு காண வீட்டிலேயே சில எளிய முறையில் பின்பற்றினாலே விரைவில்     குணமடையலாம்

நெட்டி பானை, மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய ஒரு சிறிய பானை வடிவில் இருக்கும்

இதில் லேசான சுடுநீரில் சிறிது உப்பு கலந்து, தலையை ஒரு  பக்கமாக சாய்த்து தண்ணீரை ஒரு மூக்கின் வழியே விடவேண்டும்

அது தானாகவே மற்றொரு மூக்கின் வழியாக வந்துவிடும்

இப்படி செய்யவதால், சளியை கரைத்து, வைரஸ், பாக்டீரியா தொற்று மற்றும் கிருமிகள், அழுக்குகள், ஆகிய எல்லவற்றையும் வெளியே எடுத்துவிடும்

இந்த பயிற்சி அடிக்கடி செய்துவந்தால், நிரந்தரமாக குணமடையமுடியும்

இதை தவிர உடல் உஷ்ணத்தால்     வரக்கூடிய சளி தொந்தரவை சரிசெய்ய நல்லெண்ணையில் வெந்தயம், அல்லது     நொச்சி இலை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும்

வடிகட்டி, அந்த எண்ணையை தலைக்கு     தேய்த்து குளித்து வந்தால், உடல் சூடு தணிந்து, சைனசிடிஸ் (Sinusitis)     பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்