கடலை, பொட்டுக்கடலை என பல பெயர்களில் அழைக்கப்படும் பொரிகடலையில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
பொட்டுக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
பொரிகடலை இதயத்தை ஆரோக்கிமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதேபோல், இது வலுவான மற்றும் அடர்த்தியான முடி வளரவும், இளநரை பிரச்சனையை சரிசெய்யவும் உதவுகிறது.
குறைந்த கலோரியில் அதிக புரோட்டீனை தருகின்ற இந்த பொட்டுக்கடலையை ஒரு கைப்பிடி சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வை தந்து பசியை கட்டுப்படுத்திவிடும்.
பொட்டுக்கடலை கெட்ட கொழுப்புகளை எளிதில் கரைப்பதோடு, செரிமான பிரச்சனைகளை சரி செய்து குடலையும் பாதுகாக்கிறது.
இதில் உள்ள வைட்டமின்கள் அனைத்தும் எலும்புகள், நரம்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தி உடலுக்கு அதிக ஆற்றலை தருகிறது.
பொரிகடலையில் வெல்லம் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால், குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைக்கும்.
மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு இருந்தால், ஒரு கைப்பிடி அளவு பொட்டுக்கடலை சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் இரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.
பொட்டுக்கடலை குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களை சீராக்கும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.