Sidhanathan K       Feb 23, 2025

அமுக்கிரா கிழங்கு சூரணத்தின் ஆரோக்கிய பயன்கள்.. பெண்களுக்கு ரொம்ப முக்கியம்..!!

அமுக்கரா கிழங்கை அரைத்து பவுடர் செய்யும் சூரணம்தான் அஸ்வகந்தா பொடியாகும். இந்த சூரணம் வாத வலிகளுக்கு சிறந்த மருந்தாகும். மேலும், உடலுக்கு ஊட்டத்தையும், ஆற்றலையும் மற்றும் மனதுக்கு உற்சாகத்தையும் தரக்கூடியது.

மூளை செல்களை தூண்டி, அதிக புத்துணர்ச்சியை வழங்குவதால், சீரான இதயத் துடிப்புடன், மன உளைச்சலில் இருந்தும் விடுபட முடிகிறது.

இந்த கிழங்கு வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு என அனைத்துக்குமே மருந்தாகிறது.

அமுக்கிரா பொடியை தேனுடன் கலந்து சாப்பிடுவது குழந்தை பாக்கியத்திற்கு உதவும். மேலும், அமுக்கிரா பொடியை நெய்யுடன் கலந்து சாப்பிடுவது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

அமுக்கிரா கிழங்கு பொடி 1 பங்கு, கற்கண்டு 3 பங்கு சேர்த்து, காலையும் மாலையும் பசும்பாலுடன் 4 கிராம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்குவதுடன் உடலுக்கு பலத்தையும் தரும்.

மாதவிடாய் தொந்தரவு இருப்பவர்களுக்கு இந்த பொடி அருமருந்தாகும். இடுப்பு வலி அதிகமாக இருந்தால், அமுக்கிரா கிழங்கை பசும்பால் விட்டு விழுதாக அரைத்து அதை கொதிக்க வைத்து, பற்றுபோல போடுவதால் நிவாரணம் கிடைக்கும்.

அமுக்கரா கிழங்கு தூளை சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பருக்கும். பருத்த உடல் இளைக்குமாம். உடல் எடை குறைய இக்கிழங்கின் பவுடரை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஊளைச்சதை குறைய துவங்கும்.

1 ஸ்பூன் அமுக்கிரா பொடியை, 3 ஸ்பூன் பாலில் கலந்து காலை, மாலை 2 வேளையும் சாப்பிடுவதால் மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.