கருப்பு பூண்டு ஆனது நொதித்தல் செயல்முறைக்கு உட்பட்டது. அதாவது, சாதாரண பூண்டு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் கீழ் வாரக்கணக்கில் புளிக்க வைக்கப்படுகிறது.
இதன் காரணமாக பூண்டின் அமைப்பு, நிறம் மற்றும் நிலைத்தன்மை மாறுபடுகிறது. இது இனிப்பான சுவையுடன் மற்றும் சிரப் தயாரிப்பில் பயன்படுகிறது. இது வழக்கமான பூண்டை விட மென்மையானது.
கருப்பு பூண்டில் சாலில் சிஸ்டைன் உள்ளிட்ட பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால், இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதற்கும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் பயன்படுகிறது.
கருப்பு பூண்டில் காணப்படும் அல்லிசின் போன்ற கலவை வளர்சிதை மாற்றத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உடல் கலோரிகளை எரித்து எடை மேலாண்மைக்கு வழிவகுக்குகிறது.
அதேபோல், அல்லிசின் கலவை நோய்த்தொற்றுகள் ஏற்படாத வகையில், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கிறது.
கருப்பு பூண்டு கொலஸ்ட்ரால் அளவையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. அதோடு, இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
கருப்பு பூண்டு சாற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் இந்த கருப்பு பூண்டை தினந்தோறும் காலை வெறும் வயற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளலாம்.
உடலில் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த கருப்பு பூண்டை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வரலாம்.