வில்வம் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
வில்வம் பழம் நாம் உண்ணும் உணவை சிறப்பாக ஜீரணிக்கவும், குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும், இது உடல் சூட்டை குறைக்கவும் உதவுகிறது.
வில்வம் பழத்திற்கு கொலஸ்ட்ரால் கட்டுப்படுவதோடு இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். மேலும், இது சர்க்கரை நோய் மற்றும் அல்சர்ரை நெருங்க விடாமல் பாதுகாக்கும்.
வில்வ இலைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரை வடிகட்டி குடித்தால், டானினின் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் செரிமான உறுப்புகளில் ஏற்படும் புண்கள் மற்றும் வலியைக் குணப்படுத்தும்.
கொதிக்கும் நீரில் வில்வ பழத்தின் இலைகளுடன் இரண்டு சிட்டிகை மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.
வில்வ இலையை நன்றாக அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு எடுத்து, பால் அல்லது மோர் உடன் கலந்து குடித்தால் கல்லீரல் பலப்படுவதோடு, மஞ்சள் காமாலையும் குணமடைகிறது.
வில்வ பழத்தின் சதையை அரைத்து வடிகட்டி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு நாளைக்கு 3 முறை குடித்து வர, மலத்தில் இரத்தம் வருவதைத் தடுக்கவும், குடல் இயக்கம் சீராக நடைபெறவும் உதவும்.
நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் முற்றிலும் நின்றுவிடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் வராமலும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கவும் உதவுகிறது.