ஆட்டின் இறைச்சி மட்டுமின்றி, அதன் ஒவ்வொரு உறுப்புக்களிலும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அதில் ஒன்றுதான் ஆட்டின் மண்ணீரல்.
இதனை சுவரொட்டி என்றும் கூறுவோம். சமைக்கும் முன் பச்சையாக இருக்கும் போது சுவரில் ஒட்டிக்கொள்வதால் இதற்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
சுவரொட்டியில் புரோட்டீன், வைட்டமின் சி, வைட்டமின் பி12, பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க், அமினோ அமிலங்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
50 கிராம் மண்ணீரலில் ஒரு நாளைக்கு தேவையான இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
ஹீமோகுளோபின் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த மண்ணீரலை சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நீங்கும்.
சுவரொட்டியில் பெருங்குடல் அழற்சியை சரிசெய்யக்கூடிய பண்புகள் உள்ளதால், பெருங்குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டவர்கள் இதை உணவில் சேர்ப்பதன் மூலம், அதிலிருந்து விரைவில் விடுபடலாம்.
பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சுவரொட்டி ஒரு சிறந்த தேர்வாகும். சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளை தடுக்கிறது.
முடக்குவாதம் உள்ளவர்களுக்கு இது ஒரு அருமருந்தாகும். வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்களை ஆற்றக்கூடியது.