Sidhanathan K       Jan 20, 2025

நாட்டு வைத்தியம்.. கோரைக்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!

கோரைக்கிழங்கு மற்றும் இஞ்சி ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பசையாக்கி சிறிதளவு தேன் சேர்த்து சுண்டைக்காய் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் குடல்  புழுக்கள் அழிந்துவிடும் .

பச்சை கோரை கிழங்குகளை சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து அதனை அரைத்து மார்பகத்தில் பூசி வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

இது பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் வராமல் தடுப்பதோடு, வெள்ளைப் படுதலை சரி செய்யவும் உதவுகிறது. மேலும், இது வாயு பிரச்சனை மற்றும் வாத பிரச்சனையையும் சீராக்குகிறது.

கோரைக்கிழங்கை பொடித்து 1 டம்ளர் பாலில் அரை ஸ்பூன் கலந்து தினமும் காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி மற்றும் தசைவலி குணமாகும்.

கோரைக்கிழங்கு பொடியை ஒரு கிராம் அளவு எடுத்து காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர ஞாபக மறதி மற்றும் காசநோய் குணமாகும்.

கோரைக்கிழங்கு, சுக்கு, வசம்பு, இலை கள்ளி வேர் ஆகிய நான்கையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களால் ஏற்படுகின்ற நச்சுத் தன்மை நீங்கும்.

கோரைக்கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி மற்றும் சந்தன பொடி ஆகியவற்றுடன் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசி வர முகப்பரு மற்றும் முகச்சுருக்கம் சரியாகும்.

கோரைக்கிழங்கு சிறுநீரை பெருக்கவும் வியர்வையை அதிகரிக்கவும் செய்யும். இது உடல் சூட்டை நீக்கி உடலில் பலமுண்டாக உதவுகிறது.

இது இரத்தத்திலுள்ள அசுத்தங்களை போக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும், வளரும் குழந்தைகளுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது.