Sidhanathan K       Apr 10, 2025

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்த பூலாங்கிழங்கு தூள் தரும் ஆரோக்கிய நன்மைகள்..!!

பூலாங்கிழங்கில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் காரணமாக, அதன் பயன்பாடு சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

பூலாங்கிழங்கினை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து குடித்தால் தொண்டை மற்றும் சளி ஒவ்வாமை குணமாகும்.

இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இரைப்பை புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது.

பூலாங்கிழங்கு பொடி கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை குடிப்பது அஜீரணம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளைப் போக்க உதவுகிறது.

தினமும் குளித்த பிறகு முகத்திற்கு பூலாங்கிழங்கினை தடவுவதன் மூலம் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி, முகத்தை பளபளப்பாக வைத்திருக்கலாம்.

உடலின் கைகள், கால்கள், மூட்டுகள் மற்றும் இடுப்புப் பகுதிகளில் ஏற்படும் காயங்கள், வலி மற்றும் வீக்கத்தை சரிசெய்வதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

பெண்கள் பூலாங்கிழங்கினை டீ செய்து சரியான அளவில் குடித்து வருவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை மற்றும் கட்டிகள் குணமாகும்.

இந்தப் பொடியில் உள்ள கிருமி நாசினிகள் சருமத்திற்கு நறுமணம் சேர்ப்பது மட்டுமல்லாமல், ஒரு கவசம் போல பாதுகாப்பதால், 3 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிக்கப் பயன்படுத்தலாம்.