Sidhanathan K       Jul 28, 2024

மீனை போலவே மீன் முட்டையில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ பயன்கள்..!!

மீன் சாப்பிடும் அளவுக்கு மீன் முட்டைகளை யாரும் சாப்பிடுவதில்லை. ஆனால், மீனில் உள்ள சத்துக்களைவிட இந்த மீன் முட்டைக்குள் பல்வேறு சத்துக்கள் ஒளிந்திருக்கின்றன.

அதேபோல, இந்த மீன் முட்டையில் கோழிமுட்டையை விட ஊட்டச்சத்தும் எதிர்ப்புச்சக்தியும் அதிகளவு உள்ளது. வைட்டமினி ஏ, சி, ஈ போன்ற சத்துக்கள் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இது இரத்தத்தை சுத்தமாக்கி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. அதேபோல், இது எலும்புகளையும் பற்களையும் வலுவாக வைத்திருக்க உதவுகிறது. 

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால் இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. 

இரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடு அளவை குறைத்து, கொழுப்பின் அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது. 

இந்த முட்டைகளில் உள்ள திரவ வடிவிலான சுரப்பியில் வைட்டமின் E அதிகளவில் உள்ளது. இதனால், மாலைக்கண் போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதாக சொல்லப்படுகிறது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories