Sidhanathan K       Dec 18, 2024

வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் நிஷாகந்தி பூ பற்றி தெரியுமா..?

வீடுகளில் வளர்க்கப்படும் வாஸ்து செடிகளில் பிரபலமானது இந்த பிரம்ம கமலம் எனும் நிஷாகந்தி பூ. குலேபகாவலி என அழைக்கப்படும் இது கள்ளிச்செடி வகையை சேர்ந்ததாகும்.

இதனை தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வால்பாறை, கூடலூர், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் அதிகமாக காணலாம்.

இதன் பூ மலர கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆகுமாம். இவ்வளவு நாட்கள் கழித்து மலர்ந்தாலும், ஒரே இரவில் உதிர்ந்துவிடும். அதாவது இதன் ஆயுளே ஒரு இரவு மட்டும் தான்.

வருடத்தில் 1 அல்லது 2 முறை மட்டுமே பூக்கும். குறிப்பாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டுமே பூக்கும் என்பதால் இதனை விலையுயர்ந்த பூ என்று சொல்கிறார்கள்.

நிஷாகந்தி மலர் பிரம்மா மற்றும் சரஸ்வதி தேவி போன்ற தெய்வங்களுடன் தொடர்புடையது என்பதால் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

இவ்வாறு இதை தெய்வீக மலராக கருதுவதால் பெரும்பாலானோர் பறிக்க மாட்டார்கள். இந்த பூக்கள் சில நேர்மறை ஆற்றலை தருவதால் வீடுகளில் வாஸ்து பூவாக வளர்க்கப்படுகிறது.

இந்த பூ பூக்கும் தருணங்களில், நாம் ஏதாவது வேண்டிக்கொண்டால் அது நடக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது.

இந்த பூக்கள் அழகு, அதிர்ஷ்டம் என்பதையெல்லாம் தாண்டி மருத்துவ குணம் உடையதாகும். குறிப்பாக, கண்பார்வைக்கு உதவக்கூடியது.

இந்த பூவின் இலைகளை வைத்து ஆயுர்வேத மருத்துவத்தில் தீக்காயங்களுக்கும், தோலில் ஏற்படும் மற்ற காயங்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலும், இது வாத நோய், நீரிழிவு நோய், இதய கோளாறுகள், சுவாசக் கோளாறுகள், செரிமான பிரச்சனை மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

வயிற்றுவலி மற்றும் சிறுநீர்த்தொற்றுக்கு நிவாரணம் தருகிறது. வியட்நாமில் இந்த பூவை வைத்து செய்யக்கூடிய சூப், ஆண்மை விருத்தியை பெருக்குவதாக சொல்லப்படுகிறது.