Sidhanathan K       Apr 18, 2024

பல்வேறு பலன்களை தரும் பனங்கற்கண்டு.. தினமும் இப்படி உட்கொள்ளலாம்..!!

சுத்திகரிக்கப்படாத சர்க்கரையைதான் பனங்கற்கண்டு என்கிறோம். அதாவது, சுத்தமான பதநீரை பெரிய கொப்பரையில் மிதமான தீயில் சூடேற்றி பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது.

வைட்டமின் பி1, பி2, பி3, இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளிட்ட சத்துக்கள் பனங்கற்கண்டுகளில் நிறைந்துள்ளன.

இந்த குளிர்ச்சி தரும் பனங்கற்கண்டு, வெயில் காலத்தில் அனைவருக்கும் மருந்தாக உதவும்.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடிக்க, ஜலதோஷம் முதல் காசநோய் வரை அனைத்து நோய்களும் தீரும்.

இதிலுள்ள இரும்புச்சத்து வாதம் மற்றும் பித்தத்தை போக்குகிறது.

தொண்டைவலி, தொண்டைப்புண், இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும். நுரையீரலை பாதுகாக்கிறது.

நீர்ச்சுருக்கு, வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாகும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களை போக்குகிறது.

பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துவதோடு, ஈறுகளில் இரத்தக்கசிவை தடுக்கிறது.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த பனங்கற்கண்டை சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

பனங்கற்கண்டை சீரகத்துடன் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

பனங்கற்கண்டை, பாதாம் மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories