Sidhanathan K       Apr 25, 2024

தினமும் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!!

எளிய உடற்பயிற்சி என்றால் அது நடைப்பயிற்சி மட்டுமே. தினமும் 10 நிமிடம் வேகமாக நடப்பது நல்ல பலனை தரும். இந்நிலையில், பின்னோக்கி நடப்பதன் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பின்னோக்கி நடப்பது உடலின் உறுதியையும், சமநிலையையும் மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பின்னோக்கி நடக்க ஆரம்பிக்கும் போது முதலில் கீழே விழும் வாய்ப்பு இருப்பதால், முதலில் வீட்டுக்குள்ளேயே பயிற்சி செய்வது நல்லது.

பின்னோக்கி நடக்கும் போது, தோள்பட்டையை வளைத்து, பின்பக்கம் பாா்க்காமல், ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போதும், தலை மற்றும் மாா்பை நேராக நிமிா்த்தி வைத்திருக்க வேண்டும்.

பின்னோக்கி நடக்கும்போது நாம் குறுகிய மற்றும் வேகமான அடிகளை எடுத்து வைக்கிறோம். இது இடுப்பு மற்றும் கால் தசைகளின் தாங்கும் திறனை மேம்படுத்துவதோடு, மூட்டுகளில் சுமையை குறைக்கிறது.

பின்னோக்கி நடக்கும்போது பாதையை நேராக பாா்க்க முடியாமல் மூளைக்கு வேலை கொடுத்து பக்கவாட்டில் பார்த்துக்கொண்டு நடப்பதால், மூளை சுறுசுறுப்பாக செயல்படும்.

நாள்பட்ட முதுகுவலி உள்ளவர்களுக்கு பின்னோக்கி நடப்பது மிகவும் நன்மை பயக்கும்.

வழக்கமான நடைப்பயிற்சியை போல, பின்னோக்கி நடப்பதும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது. அதேபோல், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

பின்னோக்கி நடக்கும்போது, முன்னோக்கி நடப்பது மேம்படும். மேலும், கீழ்வாதம், முடக்குவாதம் உள்ளவர்களுக்கு இது நன்மை பயக்கும்.

முன்னோக்கி நடப்பதைவிட, பின்னோக்கி நடக்கும் போது அதிகமான கலோரிகளை எரிக்க முடியும்.

பின்னோக்கி நடப்பதை காட்டிலும், ஓடினால் முழங்கால் சதைகளுக்கு வலிமை கிடைக்கும். சதைகளில் காயங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories