பச்சைப்பயிறில் வைட்டமின் ஏ, பி, இ, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து என ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன. அதோடு அளவுக்கு அதிகமான நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.
பச்சை பயிறை இரவு முழுதும் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி, மெல்லிய துணியில் 10 நேரம் கட்டிவைத்து, காற்றோட்டமான இடத்தில் வைத்து அடிக்கடி தண்ணீரை தெளித்து வர முளை கட்டிய பச்சை பயறு ரெடி.
இந்த முளை கட்டிய பச்சை பயிரை நீராவியில் 5 முதல் 7 நிமிடம் வரை வேக வைத்தால் அதன் முழு ஊட்டச்சத்தும் கிடைத்துவிடும். இந்த முளைகட்டிய பயிறில் உள்ள நன்மைகளை பற்றி இப்போது பார்ப்போம்.
இதில் அமினோ அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளதால் புற்றுநோய் செல்களின் அபாயத்தை குறைக்கிறது. மேலும் உயர் ரத்த அழுத்த பிரச்சனையை போக்கி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய இந்த பயிறு தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. வயிற்றுப்புண்ணை குணப்படுத்துவதால், அல்சர் உள்ளவர்கள் தவறாமல் எடுத்துக்கொள்ளலாம்.
இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தினமும் பச்சை பயிரை சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படாமல் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். மேலும், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றின் அபாயத்தையும் குறைக்கிறது.
மாதவிடாய் நேரங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, உடல் பலவீனம் அடைந்துவிடும். அந்த சமயங்களில் பச்சைப்பயிறு பெரிதும் உதவக்கூடியது.
இந்த பச்சை பயிறு கல்லீரலில் கொழுப்பு சேர்வதை குறைக்கிறது. அதோடு நரம்பு செயல்பாடு மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது.