Sidhanathan K       May 01, 2025

கருப்பு எள்ளைக் காட்டிலும் வெள்ளை எள்ளில் ஒளிந்து கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

வயதானவர்களுக்கு எலும்பு மற்றும் மூட்டு வலி ஏற்படுவது சகஜம். நமது உடலின் எலும்புகள் எலும்பு முறிவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க கால்சியம் அவசியம்.

வெள்ளை எள் (white sesame) சாப்பிடுவது கால்சியம் குறைபாட்டை சரிசெய்ய உதவும். இந்த வெள்ளை எள் விதைகளில் கால்சியம், மெக்னீசியம், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் டி, பி1 மற்றும் பி6 நிறைந்துள்ளன.

நீரிழிவு நோயாளிகள் இதை எடுத்துக் கொண்டால், உடலில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

வெள்ளை எள்ளில் உள்ள மெத்தியோனைன் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே, வெள்ளை எள்ளை உணவில் சேர்த்துக் கொள்வது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

அதேபோல, வெள்ளை எள்ளில் உள்ள மெத்தியோனைன் உடல் கொழுப்பை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது.

எள்ளில் உணவு புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை தசைகளை வலுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் உதவுகின்றன.

வெள்ளை எள்ளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கின்றன. குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் மற்றும் வயிற்றுப் புற்றுநோய் செல்களை நீக்குகிறது.

வெள்ளை எள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு, மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது.

வெள்ளை எள்ளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் உடலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்து போராட உதவுகிறது.

வெள்ளை எள் சாப்பிடுவது முடி வெள்ளையாக மாறுவதைத் தடுக்கிறது. மேலும் முடியை பளபளப்பாக வைத்து கொள்வதற்கும் உதவுகிறது.

இதில் உள்ள ஒமேகா-3, ஒமேகா-6 மற்றும் ஒமேகா-9 போன்ற ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் ஏற்படும் பொடுகு, வறட்சி போன்றவற்றை தடுக்கிறது.