Sidhanathan K       Jun 01, 2024

கருவிலிருக்கும் குழந்தைக்கு உதவக்கூடிய விரால் மீன்..!!

அசைவ உணவுகளில் கடல் உணவுகளான மீன்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். அதிலும், விரால் மீனுக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. ஒமேகா 3 அதிகமுள்ள மீனில் விரால் மீனும் ஒன்று.

100 கிராம் விரால் மீனில், சோடியம் - 62 மில்லி கிராம், கொழுப்பு - 1 கிராம், புரோட்டீன் - 18 கிராம், கொலஸ்ட்ரால் - 44 மில்லி கிராம், கால்சியம் - 1%, வைட்டமின் C - 2%, இரும்புச்சத்து - 2% அடங்கியுள்ளன.

இந்த மீன்களில் சாச்சுரேட்டடு கொழுப்பு உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது.

இது வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயத்தை குறைக்கிறது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கு ஒமேகா 3 சத்துக்கள் கிடைக்கச் செய்யலாம்.

மேலும், குழந்தைகளின் பார்வைத்திறன் அதிகரிப்பதோடு, மூளை வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. 

அதேபோல, கருவில் உள்ள குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது.

இந்த விரால் மீன், சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories