Sidhanathan K       May 30, 2023

மூல நோயை விரட்டக்கூடிய ஆரோக்கிய உணவுகள்..!!

மரபியல், கர்ப்பம், உடல் பருமன் போன்ற பல்வேறு காரணங்களால் மூல நோய் ஏற்படலாம்.

அதிக காரமான உணவுகளை உண்பவர்களுக்கு மூல நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை வரலாம்.

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மூல நோயின் தாக்கத்தை குறைக்க பீன்ஸ், பருப்பு வகைகள், பட்டாணி மற்றும் கொண்டைக்கடலை போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

மூல நோய் உள்ளவர்கள் உணவில் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மூல நோயின் அசௌகரியத்தை குறைக்க ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முள்ளங்கி மற்றும் முட்டைக்கோஸ் சாப்பிடலாம்.

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பேரிக்காய், ராஸ்பெர்ரி, ஆப்பிள் மற்றும் குறிப்பாக வாழைப்பழம் சாப்பிடலாம்.

வெள்ளரி மற்றும் முலாம்பழங்கள் அறுவை சிகிச்சையின்றி மூல நோயை குணப்படுத்தக்கூடியது.

வெந்தயம் குளிர்ச்சி தரும் பொருள் என்பதால், தினமும் இரவில் சிறிது வெந்தயத்தை ஊறவைத்து, காலை வெறும் வயிற்றில் அந்த நீருடன் வெந்தயத்தை சேர்த்து குடித்து வந்தால் மூலம் பிரச்சனை விரைவில் குணமாகும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories