Tap to Read ➤

100 வயது வரை வாழ ஆரோக்கியமான உணவுகள்

நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ காலையில் இந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
HTML Tamil
உடல் சோர்வாக இருந்தால் காலையில் அவித்த முட்டை அல்லது ஆம்லேட் செய்து, தோசையுடன் உண்ணலாம்.
சமைக்க எளிதாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் ஓட்ஸை, காலை உணவாக எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
இரும்பு, வைட்டமின் பி, மாங்கனீசு, மெக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் ஓட்சில் நிறைந்துள்ளன.
கீரைகள் மற்றும் பிற காய்கறி வகைகள், நமது உடல் எடையை சரியாக நிர்வகித்து, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது.
காலை உணவாக கோதுமை டோஸ்ட்டை எடுத்துக் கொள்ளலாம். மேலும் சுவையாக இருக்க, பழங்கள் மற்றும் முட்டையை வைத்து சாண்ட்விச் செய்து உண்ணலாம்.
காலை உணவாக பழங்களையும் எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் உயர் புரதம் அல்லது நார்ச்சத்து உணவுகளுடன் இணைத்து உண்ணலாம்.
காலையில் எளிதாக ஏதாவது உணவை தயார் செய்ய விரும்பினால், சியா விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஸ்மூத்தி, சால்ட் மற்றும் தயிர் போன்ற உணவுகளிலும், வெறும் தண்ணீரிலும் சியா விதைகளை சேர்த்து கொள்வது நல்லது.
அவல் அரிசியை, உங்களுக்குப் பிடித்த காய்கறிகளுடன் மசலாப் பொருட்களுடன் சமைத்து, நல்ல காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்துவிட்டு, நல்ல காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை உண்டால், நீண்டநாள் ஆரோக்கியமாக வாழலாம்.