Tap to Read ➤

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்

நோய் வருவதை தடுக்கும் மூலிகைச் செடிகளை வீட்டில் வளர்ப்பது நல்லது.
HTML Tamil
வீட்டில் சில மூலிகைச் செடிகளை வளர்த்தால், கஷ்டம் நீங்கி லக்ஷ்மி கடாட்சம் இருக்கும் என்பது நம்பிக்கை.
நோய் வருவதை தடுக்கும் சில அற்புத மூலிகைச் செடிகளை வீட்டில் வளர்த்து வந்தால், உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
துளசி

மூலிகை செடிகளின் ராணி என வர்ணிக்கப்படும் அதிக மருத்துவ குணம் கொண்ட துளசியை, வீட்டில் வளர்ப்பது ஆரோக்கியத்தை தரும்.
கற்பூரவள்ளி

நீச்சத்து மற்றும் காரத்தன்மை கொண்ட கற்பூரவள்ளிச் செடியை வீட்டில் வளர்க்கலாம். இதன் இலை, சளி, காய்ச்சலில் இருந்து விடுபட பயன்படுகிறது.
செம்பருத்தி

தலைமுடி கறுகறுவென அடர்த்தியாக வளர வைக்கும் செம்பருத்தியை வீட்டில் வளர்க்கலாம். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க செம்பருத்தி பூ உதவுகிறது.
வல்லாரை

மூளை வளர்ச்சி, நினைவாற்றலுக்கு சிறந்ததாக இருக்கும் மருத்துவ குணமுள்ள வல்லாரைக் கீரையை வீட்டில் வளர்ப்பது நல்லது.
கற்றாழை

கண் திருஷ்டிக்காக வீடுகளில் வளர்க்கப்படும் கற்றாழை, மருத்துவ குணமும் கொண்டது. இது, உடற்சூட்டையும், தூக்கமின்மையையும் சரி செய்யும் ஆற்றல் கொண்டது.
நொச்சி

கொசுவை பக்கத்தில் அண்ட விடாத செடி என அழைக்கப்படும் நொச்சியை வீட்டில் வளர்க்கலாம். இதன் இலைகள், சுவாச நோய்க்கும், வலி நிவாரணமாகவும் பயன்படுகிறது.
பிரண்டை

எலும்புகளை வலுபெற வைக்கும் அற்புத மூலிகைச் செடியாக பிரண்டை விளங்குகிறது. இதனையும் வீட்டில் வளர்த்தால் பல நண்மைகள் பெறலாம்.
நிலவேம்பு

டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை சரி செய்யும் மூலிகை வகையைச் சேர்ந்த நிலவேம்புச் செடியையும் வீட்டில் வளர்க்கலாம்.
கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணிச் செடிகளை வீட்டில் வளக்கலாம். இதன் இலைகள், முடி வளரவும், கல்லீரல், சுவாச ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது.