Tap to Read ➤

குழந்தையின் மென்மையான மேனியை பாதுகாப்பாக வைத்திருக்க சில டிப்ஸ்!!

பிறந்த குழந்தைகளின் ஆடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய சில குறிப்புகள்..!!
Sidhanathan K
பிறந்த குழந்தைகளுக்கு நாப்கின்களாக பழைய சேலை, வேட்டி துணிகளை பலர் பயன்படுத்துகின்றனர். அவை சுத்தமாக இல்லாவிட்டால் பிரச்சனைகள் ஏற்படும். அதனால் புதிய துணிகளில் தைத்து பயன்படுத்துவது நல்லது.
துணி நாப்கின்கள் அல்லது தைத்த நாப்கின்களை நன்றாக துவைத்து, 'டெட்டால்' போன்ற கிருமிநாசினியில் அலசி வெயிலில் காயவைத்த பின்னரே குழந்தைக்குப் பயன்படுத்த வேண்டும்.
குழந்தை ஈரம் செய்த துணி நாப்கின்களை மொத்தமாக வைத்து இரண்டு நாட்கள் கழித்து துவைக்கும்போது, அதில் கிருமித் தொற்று உண்டாகியிருக்கலாம். எனவே முடிந்தவரை அப்பொழுதே துவைத்துவிடுவது நல்லது.
துணி நாப்கின்களை துவைக்கும்போது சக்தி வாய்ந்த டிடர்ஜென்ட் பவுடர்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதிக வாசனையுள்ள டிடர்ஜென்ட் பவுடர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
குழந்தைகளுக்கு ரெடிமேட் நாப்கின்களை பயன்படுத்தும்போது, ஐந்தாறு மணி நேரங்களுக்கு அப்படியே விட்டுவிடாமல், குழந்தை ஒருமுறை 'ஈரம்' செய்துவிட்டாலே நாப்கினை மாற்றுவது அவசியம்.
அப்படிச் செய்யத் தவறினால் குழந்தையின் சிறுநீரில் நாப்கின் நனைந்து, சிறுநீரின் காரத் தன்மையை தாங்க முடியாமல் குழந்தையின் மென்மையான தோலில் அலர்ஜி உண்டாகும்.
பிறந்த குழந்தைகளுக்கு வாங்கும் துணிகளை ஒரு முறை துவைத்து உலர்த்தி பின் குழந்தைக்கு போடுவது சிறந்தது.
குழந்தைகளின் துணிகளை துவைக்கும் போது வீட்டில் உள்ள மற்றவர்களின் துணிகளுடன் சேர்த்து ஊறவைக்காமல் தனியாக ஊறவைத்து துவைப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
பிறந்த குழந்தைகளின் மென்மையான சருமத்தை பாதுகாக்க ஒரே சாய்ஸ் பருத்தி ஆடைகள்தான் .
குழந்தைகளுக்கு கழுத்து வழியாக போடும் ஆடைகளை விட முன்புறம் பட்டன் வைத்த ஆடைகள் மிகவும் வசதியாக இருக்கும். பின்புறம் பட்டன் வைத்த ஆடைகள் குழந்தையின் முதுகில் அழுத்தலாம்.
குழந்தைகளுக்கு உடலை இறுக்கிப் பிடிக்காதவாறு தளர்வான ஆடைகளை தேர்வு செய்யவும். குழந்தை எந்த காரணமும் இல்லாமல் அழுவது சௌகரியமற்ற ஆடை அல்லது பட்டன் போன்றவை கூட காரணமாக இருக்கலாம்.