Sidhanathan K       Jun 13, 2024

பேன் தொல்லைக்கு தீர்வு தரும் வீட்டு வைத்தியம்..!!

நமது இரத்தத்தை உறிஞ்சி உணவாக உண்ணும் பேன்கள் மிக விரைவாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. பொடுகு மற்றும் பேன் ஆகியவை தலைமுடியின் அழகை கெடுத்துவிடுகின்றன.

இவ்வாறு பேன் தொல்லையிலிருந்து விடுபட பின்வரும் வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.

துளசி மற்றும் வேப்ப இலையை நன்றாக அரைத்து வேர்களில் தடவி, காய்ந்ததும் தலையை அலசவும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால் பேன் பிரச்சனை வராது.

இரவு தூங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தை தூளாக்கி கலந்து தலையில் தேய்த்து மறுநாள் காலையில் குளித்தால் பேன் முற்றிலும் நீங்கும்.

உப்பு மற்றும் வினிகரை சம அளவு கலந்து, ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி முடி வேர்களில் தெளிக்கவும். 2 மணி நேரம் கழித்து தலையை கழுவினால் பேன் பிரச்சனை இருக்காது.

பூண்டை நன்கு அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி 30 நிமிடம் கழித்து குளித்தால் பேன் தொல்லை நீங்கிவிடும்.

அரை கப் தேங்காய் பாலில் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை சேர்த்து, நன்கு அரைத்து 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பேன் தொல்லை நீங்கும்.

குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories