நமது இரத்தத்தை உறிஞ்சி உணவாக உண்ணும் பேன்கள் மிக விரைவில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய உயிரினமாகும். இந்த பொடுகு மற்றும் பேன்கள் தலைமுடியின் அழகையே கெடுத்துவிடுகின்றன.
துளசி மற்றும் வேப்ப இலையை நன்றாக அரைத்து தலை முடி வேர்களில் தடவி, காய்ந்ததும் தலையை அலசவும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் பேன் பிரச்சனை வராது.
இரவு தூங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தை தூளாக்கி கலந்து, தலையில் தேய்த்து மறுநாள் காலையில் குளித்தால் பேன் தொல்லை தீரும்.
உப்பு மற்றும் வினிகரை சம அளவு கலந்து, ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி முடி வேர்களில் தெளிக்கவும். 2 மணி நேரம் கழித்து தலையை கழுவினால் பேன் பிரச்சனை இருக்காது.
பூண்டை நன்கு அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி 30 நிமிடம் கழித்து குளித்தால் பேன் தொல்லை நீங்கிவிடும்.
அரை கப் தேங்காய் பாலில் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை சேர்த்து, நன்கு அரைத்து 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பேன் தொல்லை நீங்கும்.
குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து, பின்னர் குளிக்க பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கும்.