Sidhanathan K       Apr 01, 2024

தூக்கத்தில் ஜொள்ளு ஊத்துதா..? காரணம் மற்றும் தடுக்கும் வழிமுறைகள்..!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் உறக்கத்தில் உமிழ்நீர் வடிக்கும் பிரச்சனை இருக்கும். குழந்தைகளுக்கு பெரிய பிரச்சனையாக இருக்காது. ஆனால் பெரியவர்களுக்கு ஏற்பட்டால், கட்டாயம் அதை சரிசெய்ய வேண்டும்.

நமக்கு எச்சில் மிகவும் முக்கியமானது. ஏனெனில், நம் காயங்களை ஆற்றக்கூடியவை. பொதுவாக, மனித உடலில் உமிழ்நீர் சுரப்பியால் ஒரு நாளைக்கு 1 முதல் 2 லிட்டர் எச்சில் சுரக்கும்.

தூங்கும்போது நம்மை அறியாமல் வெளிவரும் எச்சிலைத்தான் ஜொள் வடிப்பது (Drooling) என்கின்றோம். உறக்கத்தின் போது வாய் திறந்திருப்பதே எச்சில் வடிவதற்கான முக்கிய காரணமாகும்.

சிலர் குப்புற படுத்து தூங்கும் போது வாயை திறந்து கொண்டு தூங்குவது ஜொள்ளு விடுவதற்கு வழிவகுக்கும். அதேபோல், பக்கவாட்டில் படுத்திருக்கும் போதும் எச்சில் வழிகிறது.

மனஅழுத்தத்தால் ஏற்படும் பக்கவிளைவுகளினால் உமிழ்நீர் அதிகமாக சுரக்கிறது. அஜீரணம் உள்ளவர்களுக்கும் உமிழ்நீர் சுரப்பி அதிக உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது.

தூக்க மாத்திரைகளை உட்கொள்ளும் போது ஆழ்ந்த நிலையில் தூங்குவதாலும் எச்சில் வடியும்.

பக்கவாதம் மற்றும் பெருமூளை வாதம் போன்ற நரம்பியல் நோய் உள்ளவர்களுக்கு தூக்கத்தின் போது எச்சில் வடியும் வாய்ப்புகள் அதிகம்.

தூக்கத்தில் எச்சில் வடிப்பவர்கள் ஒருபுறமாக சாய்ந்து தூங்காமல் நேராக படுத்து தூங்கினால் எச்சில் வடிவதை கட்டுப்படுத்தலாம்.

அதேபோல், தூக்கத்தில் எச்சில் வடிவதை கட்டுப்படுத்த உதவும் உபகரணங்களை (Drool devices) பயன்படுத்தலாம். தூங்கும் போது வேப்பர் ரப் (vapor rub)-ஐ மூக்கில் தடவிக் கொள்ளலாம். 

இரவு உணவிற்கு பின், வெதுவெதுப்பான நீரில் சிறிது நெல்லிக்காய் பொடியை சேர்த்து கலந்து குடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.

சிறிதளவு படிகாரக் கல்லை அரைத்து, தண்ணீரில் கலந்து, அந்த நீரை ஒரு நாளைக்கு 1-2 முறை வாய் கொப்பளிக்கவும். இதை தினமும் செய்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தினமும் 2-3 முறை சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். இதன் மூலம் விரைவில் தூக்கத்தில் ஜொள்ளு விடும் பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories