Sidhanathan K       May 08, 2024

உதட்டின் மேல் புண் உள்ளதா..? சரி செய்வதற்கு வீட்டு வைத்தியம்..!!

இரவில் தூங்கி எழுந்து காலையில் பார்த்தால் உதட்டின் மேல் பகுதியில் புண் இருக்கும். சிலருக்கு சிவந்திருக்கும். இது ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் அழற்சி அல்லது அக்கி, வாய்ப்புண் ஆகும்.

இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி சரி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

2 வெற்றிலை மற்றும் 3 பூண்டு பல் எடுத்து அரைத்து சாறு எடுக்கவும். இந்த சாற்றை உதட்டின் மேல் உள்ள புண் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். காய்ந்ததும் மீண்டும் சாறை தடவி வந்தால் புண் விரைவில் மறையும்.

ஐஸ் கட்டியை எடுத்து அந்த புண்களில் வைத்தால் எரிச்சல் குணமாகி புண்கள் ஆறிவிடும்.

முகத்தை கழுவி, ஒரு காட்டன் துணியால் துடைத்த பின், உதட்டின் மேல் இருக்கும் புண்களில் தேங்காய் எண்ணெயை தடவலாம். அதேபோல், புண் இருக்கும் பகுதியில் Vaseline பயன்படுத்தலாம்.

இந்த உதட்டு புண்களுக்கு கற்றாழை ஜெல்லை தடவினால் புண்கள் விரைவில் மறையும்.

தண்ணீரில் புதினா இலையை ஊறவைத்து ஒரு காட்டன் துணியில் நனைத்து, அதனை புண்களின் மீது வைத்து வந்தால் விரைவில் குணமாகும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories