Tap to Read ➤

மருத்துவமனையை மறக்கச் செய்யும் வீட்டு வைத்தியம்!!

பல நோய்களுக்கான வைத்தியம் வீட்டு சமையல் அறையிலேயே உள்ளது.
HTML Tamil
நம் முன்னோர்கள், மருத்துவ குணமுடைய பொருட்களை உணவுடன் சேர்த்து உண்டு வந்ததால், நீண்ட நாள் நோய், நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
ஆனால் தற்போது சிறு தலைவலிக்குக் கூட பயந்து, மருத்துவமனையை நாடுகிறோம். ஸ்கேன், ஈசிஜி என அலைந்து கொண்டிருக்கிறோம்.
பல்வேறு நோய்களுக்கான மருந்து, நம் வீட்டு சமையல் அறையில் உள்ள பொருட்களிலேயே உள்ளது. அதுபற்றி தெரிந்து கொள்வோம்.
நெல்லிக்காய்

தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டால், என்றும் இளமையோடும், உற்சாகத்துடனும் இருக்கலாம்.
பப்பாளி

அடிக்கடி பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால், மூளை வலிமை பெறும்.
பொன்னாங்கண்ணி கீரை

பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால், நம் உடல் பொன்னிறமாக பொலிவுடன் ஜொலிக்கும்.
மாதுளம் பழம்

 தினமும் மாதுளம் பழம் சாப்பிட்டால், மாரடைப்பு வராமல் நம்மை காக்கும்.
கற்பூரவல்லி

இருமல், மூக்கடைப்பு உண்டாகி, மூச்சு விட முடியாமல் தவிப்பவர்களுக்கு, கற்பூரவல்லி நல்ல மருந்தாக செயல்படும்,
சீதா பழம்

உயிரைக் கொல்லும் கேன்சர் நோயை குணமாக்கும் மருந்தாக சீதா பழம் பயன்படுகிறது.
அருகம்புல்

நம் உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கும் அரும் மருந்தாக அருகம்புல் விளங்குகிறது.
முள்ளங்கி

உணவில் முள்ளங்கியை அடிக்கடி சேர்த்து சாப்பிட்டால், நீரழிவு நோய் குணமாகும்.
முடக்கத்தான் கீரை

 எலும்பு தேய்ந்து போவாதால் வரும் மூட்டு வலி பிரச்சனைக்கு, முடக்கத்தான் கீரை நல்ல மருந்தாக செயல்படுகிறது.
பீட்ரூட்

 ரத்த சோகை ஏற்பட்டால், அதனை குணமாக்க பீட்ரூட்டை சமைத்து சாப்பிடலாம்.
அரைக்கீரை

 கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோருக்கு, அரைக்கீரை அரும் மருந்தாக இருக்கிறது.