Tap to Read ➤

நோய்களை குணமாக்கும் வீட்டு வைத்தியம்!

நம் வீட்டிலுள்ள பொருள்கள் மூலம் பல்வேறு நோய்களையும் எளிதாக குணப்படுத்தலாம்.
HTML Tamil
நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற வீட்டு வைத்தியம் மூலம், அந்தக் காலத்தில் நோய்களை மக்கள் தாங்களாகவே  குணமாக்கி வந்தனர்.
அன்றாடம் உண்ணும் உணவே அவர்களுக்கு மருந்தாக செயல்பட்டதால், மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால், தற்போது சிறு தலைவலிக்கு கூட ஆங்கில மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆங்கில மருந்து, மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால், அதன் மூலம் வரும் பக்க விளைவுகளாலும் அவதிப்படும் சூழலும் ஏற்படுகிறது.
வீட்டு வைத்தியம் மூலம்  எளிய முறையில் என்னென்னநோய்களை குணமாக்கலாம் என்பது குறித்து இப்போது பார்ப்போம்
உடலில் சக்தி குறைவாக உள்ளவர்கள், இரவு உணவாக வாழைப் பழத்தையும், தேங்காயும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல சக்தி கிடைக்கும்.
உடல் எடையால் அவதிப்படுபவர்கள், வெள்ளை பூசணிக்காயை சாறு பிழிந்து, காலையில் தொடர்ந்து குடித்து வந்தால் உடல் பருமன் குறைய தொடங்கும்.
இளம் வயதிலேயே முடி கொட்டினால், முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து, தலைக்கு தேய்த்து வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
பித்தம், தலை சுற்றல் ஏற்பட்டால், ஒருபிடி கொத்தமல்லி தழையை அரைத்து சாறு எடுத்து, பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும்.
சூடு காரணமாக உடலில் வேர்க்குரு கட்டியால் அவதிப்படுபவர்கள், சந்தனத்தையும், பன்னீரையும் உடலில் பூசினால் வேர்க்குரு படிப்படியாக மறைந்து விடும்.
வயிறு மந்தமாக இருப்பதாக உணர்பவர்கள், புதினா மற்றும் எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து குடித்து வந்தால் நன்றாக பசி எடுக்கும்.
வாயு, வயிற்று வலியை சரி செய்ய, ஒரு ஸ்பூன் சீரகத்தை வறுத்து, ஒரு டம்பளர் தண்ணீர் சேர்த்து  நன்றாக கொதிக்க வைத்து, பனைவெல்லம் சேர்த்து குடித்தால் சரியாகிவிடும்.
மழை காலங்களில் ஏற்படும் சேற்றுப் புண் சரியாக, வேப்ப எண்ணெய்யை காய்ச்சி, கால் விரல்களில் தடவி வந்தால், சேற்றுப்புண் 2 நாட்களில் குணமாகி விடும்.