Tap to Read ➤

அல்சர் நோயை குணமாக்கும் வீட்டு வைத்தியம்

சரியான நேரத்தில் உணவு உண்டால் அல்சர் நோய் ஏற்படாது.
HTML Tamil
குறித்த நேரத்தில் உணவு அருந்தாமை மற்றும் முறையற்ற உணவு முறைகளால் அல்சர் பிரச்சனை ஏற்படுகிறது.
அடிவயிற்றில் வலி, குமட்டல், ஏப்பம், வயிற்று உப்புசம் உள்ளிட்டவை அல்சர் நோய் வருவதற்கான அறிகுறிகளாகும்.
அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வந்தால் விரைவில் குணமாகும்.
அல்சர் நோயால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் பச்சை வாழைப்பழத்தை உண்டு வந்தால் அல்சர் நோய் குணமாகும்.
அல்சர் நோய் குணமாக அரும் மருந்தாக மணத்தக்காளி கீரை பயன்படுகிறது. இந்த கீரையை உண்டு வந்தால் அல்சர் குணமாகும்
துளசி இலையுடன் சிறிது மாசிக்காயை சேர்த்து, வாரத்திற்கு 2 முறை குடித்து வந்தால் அல்சர் சரியாகும்.
தேங்காய் பாலுடன் தேன் கலந்து, தினமும் குடித்து வந்தால் அல்சர் நோய் விரைவில் குணமாகும்
கொப்பரைத் தேங்காயை தினமும் சிறிதளவு மென்று சாப்பிட்டு வந்தால் அல்சர் நோயை குணப்படுத்தலாம்.
வீட்டில் ஆப்பிள் ஜூஸ் தாயர் செய்து, நாள்தோறும் குடித்து வந்தால் அல்சர் நோய் குணமாகும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில், வேப்பிலையை சிறிது சாப்பிட்டு வந்தால் அல்சர் மட்டுமின்றி, வயிற்றுப் பிரச்சனைகளும் குணமாகும்.
அல்சர் நோயால் பாதிக்கப்படுவோர், தினமும் அகத்திக்கீரை சாப்பிடலாம். சூப் செய்தும் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.