பொதுவாகவே செயற்கையாக தயாரிக்கும் பொருட்களை காட்டிலும், இயற்கை மூலம் கிடைக்கும் பொருட்களில ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு
இயற்கையாக கிடைக்கும் பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தினால் போதும், நிச்சயம் நல்ல தீர்வு உண்டாகும்
அம்மை நோயால் சருமத்தில் ஏற்படும் தழும்புகள் படிப்படியாக மறைய இந்த டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
1. சம அளவில் வேப்பிலை, மஞ்சத்தூள் இரண்டையும் மைய அரைத்து, இரவில் ஒரு பக்கெட் தண்ணீரில் கரைத்து கொள்ளவேண்டும்
காலையில் இந்த தண்ணீரில் குளித்து வர கொஞ்சம் கொஞ்சமாக தழும்புகள் மறையும்
2. ஒரு ஸ்பூன் அளவு கசகசாவை அரைத்து, அதில் சிறிது அளவு கடலை மாவு, பால் ஏடு சேர்த்து, உடலில் தழும்புகள் இருக்கும் இடத்தில் பூசி வர நல்ல மாற்றம் தெரியும்