நூறு மில்லி பசும்பாலை அதே அளவு தண்ணீரில் கலந்து, அதனுடன் வெண்தாமரை மலர்களைச் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆவி பிடித்தால் கண் நோய்கள் குணமாகும்.
நீரில் ஒரு கைப்பிடி சுக்கு தட்டி போட்டு தினமும் காய்ச்சி குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மருத்துவ குணம் கொண்ட சுக்கு ஜீரணத்துக்கு உதவும் மற்றும் வாயுவை அகற்றும்.
அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் கடுக்காய் பொடியை சேர்த்து குடித்து வந்தால் குடல் சுத்தமாகும்.
வால்மிளகின் தூளை வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பி சாப்பிட கபம் நீங்கும்.
வல்லாரை கீரையை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை சாப்பிட சித்தபேதி குணமாகும்.
4 சிட்டிகை வேப்பம்பூவை எடுத்து தூள் செய்து இஞ்சி சாறுடன் கலந்து சாப்பிட அடிக்கடி ஏப்பம் வரும் பிரச்சனை சரியாகும்.
எறும்பு, கொசு போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கலாம்.
பீட்ரூட் சாறில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.
கறிவேப்பிலையை ஒரு டீஸ்பூன் சீரகத்துடன் சேர்த்து அம்மியில் மை போல் அரைத்து எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்து விட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.
சிறிது சுண்ணாம்புடன் தேன் அல்லது வெல்லம் சேர்த்து குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவை வரும். அந்த பசையை கட்டியின் மீது வைத்து அதன் மேல் வெற்றிலையை ஒட்ட கட்டி கரைந்து விடும்.