Tap to Read ➤

வீட்டிலேயே குணப்படுத்த கூடிய எளிய வைத்திய முறைகள்!

உடலில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை வீட்டிலேயே சரி செய்யலாம்.
HTML Tamil
சிறு சிறு உடல் உபாதைகளுக்கு ஆங்கில வைத்தியதை நாடாமல், பாட்டி வைத்தியம் மூலம், வீட்டிலேயே எளிதாக குணப்படுத்தலாம்.
கற்பூரவல்லி இலைச்சாற்றுடன், நல்லெண்ணெய், நாட்டு சர்க்கரையை ஒன்றாக கலந்து, நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.
வெற்றிலை சாற்றுடன் கிராம்பை அரைத்து, நெற்றியின் இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் தேய்த்து வந்தால் தலை வலி சரியாகும்
நரம்பு தளர்ச்சியால் அவதிப்படுவோர், சேம்பு கிழங்கை, புளியுடன் சேர்த்து சமைத்து, அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
வெந்தயத்தை நெய்யில் வறுத்து, மோரில் கலந்து, காலையில் தொடர்ந்து குடித்து வந்தால், வயிறு சம்மந்தபட்ட உபாதைகள் சீராகும்.
தொண்டை பிரச்சனைக்கு, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காயை பொடியாக்கி, தேனுடன் கலந்து காலை, மாலையில் சாப்பிட்டால் குணமாகும்.
ஒரு டம்பளர் தண்ணீரில், கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகியவற்றை கொதிக்க வைத்து, வடிகட்டி ஆறவைத்து குடித்தால் அஜீரணம் சரியாகும்.
எலுமிச்சைச்சாறுடன், சம அளவு தேன் கலந்து, சுளுக்கு இருக்கும் இடத்தில் நன்கு தடவி விட்டால் சுளுக்கு குறையும்.
தேமல் வந்து அவதிப்படுவோர், வெள்ளைப் பூண்டை, வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து, தினமும் தோலில் தேய்த்து குளித்தால் தேமல் சரியாகும்.
கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து, வடித்த கஞ்சியில் கலந்து, சூடுபடுத்தி, மூச்சுப் பிடித்த இடத்தில் தேய்த்தால் குணமாகும்.