முளைகட்டிய பயிறுகள் உடலுக்கு அதிக புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் சிறந்த இயற்கை உணவாகும்.
வாரம் 1-2 முறை உணவில் இதை சேர்த்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்
தேவையான பொருட்கள்: பாசிப்பயிறு -100 கிராம், கொண்டக்கடலை -100 கிராம், தடைப்பயிறு -100 கிராம், உளுந்து -100 கிராம், பட்டாணி -100 கிராம், மொச்சை -100 கிராம்
செய்முறை: எல்லா வகை பயிறுகளையும் நன்றாக சுத்தம் செய்து, 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும், பின்னர் தண்ணீரை வடித்து, சுத்தமான வெள்ளை துணியில் இறுக்கமாக கட்டி வைக்க வேண்டும்
மறுநாள் திறந்து பார்த்தால் பயிறுகள் நன்றாக முளைத்திருக்கும். அவற்றை நிழலில் பரப்பி உலர வைக்க வேண்டும். காய்ந்த பிறகு பொன்னிறமாக வரும் வரை வறுத்து அரைத்து சலித்து எடுக்கவும்
இந்த சத்துமாவுடன் வெள்ளம் மற்றும் ஏலக்காய் சேர்த்து கஞ்சி அல்லது பானம் தயாரித்து அருந்தலாம். உடலுக்கு சக்தி தரும் ஆரோக்கியமான உணவாகும்.