Tap to Read ➤

உலர் திராட்சை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?

வீட்டிலேயே தயார் செய்யலாம்!
varalakshmi n
வீட்டிலேயே உலர்திராட்சையை எந்த வித கெமிக்கலும் சேர்க்காமல் தயார் செய்யலாம் ஒரு வருடம் ஆனாலும் நன்றாக இருக்கும்
தேவையான அளவு பச்சை திராட்சை பழங்களை வாங்கி,கொஞ்சம் தூள் உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து,நன்கு கழுவி தண்ணீரை வடித்து எடுத்து வைக்க வேண்டும்
இட்லி தட்டில் உள்ள குழியிலும் கொஞ்சம் திராட்சைகளை போட்டு,பானையை மூடி,ஏழிலிருந்து பத்து நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவேண்டும்
மொத்தமாக பத்து நிமிடங்களில் திராட்சை பழம் தோல் சுருங்கி விடும்,தோல் சுருங்காத திராட்சை பழங்கள் வெயிலில் காய்ந்தாலும் உலர் திராட்சையாக மாறாது
நன்றாக அடிக்கும் வெயிலில் 2-3 நாட்கள் காய வைத்தாலே போதும்,காய்ந்த உலர்திராட்சை தயாராகிவிடும்
கடையில் வாங்க கூடிய உலர்திராட்சை போலவே இருக்கும்,காற்றுப் புகாத கவர்களில் பத்திரப்படுத்தி, பிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வருடம் வரை இதை பயன்படுத்திக் கொள்ளலாம்
கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இல்லை,கருப்பு திராட்சையிலும் இதை செய்யலாம்