Sidhanathan K       Apr 09, 2024

இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் முக்கியமான சில உணவுகள்..!!

ஹார்மோன் சமநிலையை பராமரிக்க தேவையான மிக முக்கியமான ஒன்றான கொழுப்பு (cholesterol) இரத்தம், செல்கள், தமனிகள் மற்றும் திசுக்கள் போன்று உடல் முழுவதும் காணப்படுகிறது.

தவறான உணவு, புரதச்சத்து குறைபாடு, போதிய உடல் உழைப்பு, புகைபிடித்தல், அதிக எடை போன்றவை உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கின்றன. அதிக கொலஸ்ட்ரால் அளவு உடல் பருமன், நீரிழிவு மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

அந்தவகையில் இயற்கையாகவே உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் உணவுகளைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

ஓட்ஸ், ஊறவைத்த சியா, ஆளி விதைகள், பச்சை காய்கறிகள், முழு தானியங்கள், பெர்ரி போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள்.

முட்டை, பன்னீர், எடமாம், பச்சை பீன்ஸ், பருப்பு, கொண்டைக்கடலை, காராமணி மற்றும் இறால் போன்ற புரதம் நிறைந்த உணவுகள்.

நெய், வெண்ணெய், சால்மன், ஆலிவ் எண்ணெய், பருப்புகள், நட்ஸ் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகள்.

பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள வாழைப்பழம்

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories