Sidhanathan K       Apr 27, 2024

விமானம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது.. அதிக உயரத்தில் பறக்க காரணம் என்ன..?

விமானங்கள், பொதுவாக 33,000 அடி முதல் 37,000 அடி உயரத்தில் பறக்கும். அதில் வணிக விமானங்கள், 33,000 அடி முதல் 42,000 அடி உயரத்தில் பறக்கின்றன.

அதிலும், கோன்கோர்ட் வணிக விமானம் 50,000 அடி முதல் 60,000 அடி உயரம் வரை பறக்கக்கூடியவை. இந்த உயரத்தில் பறக்கும்போதுதான் விமானத்தின் முழு சக்தியையும் பயன்படுத்த முடியும்.

உயரம் அதிகரிக்க அதிகரிக்க, காற்றின் அடர்த்தி குறைந்து, விமானம் பறப்பதற்கான காற்றின் எதிர்ப்பும் குறைவாக இருக்கும். அதனால், அவ்வளவு உயரத்தில் விமானம் எளிதாக பறக்க முடியும்.

விமானங்கள் இவ்வளவு உயரத்தில் பறக்க அதிக சக்தி தேவைப்படாததால் எரிபொருள் செலவு குறையும். இவ்வாறு எரிபொருள் சேமிக்கப்படுவது விமான நிறுவனங்களுக்கு மிகப்பெரிய லாபமாகும்.

இவ்வளவு உயரத்தில் பறப்பதால் போக்குவரத்து நெரிசல் குறைவு மற்றும் வேகமாகவும் பறக்க முடியும். விமானங்கள் இவ்வளவு உயரத்தில் பறக்க இதுவே முக்கியமான காரணங்களாகும்.

எனவேதான் அதிக எடை கொண்ட விமானங்களை குறைந்த உயரத்திலும், இலகுவான விமானங்களை அதிக உயரத்திலும் பறக்கவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு விமானம் 35,000 அடி உயரத்தில் பறக்கும்போது ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனால், பயணிகளாகிய நாம் சுமார் 15 முதல் 30 வினாடிகள் மட்டுமே சுய நினைவோடு இருக்க முடியும்.

இதுபோன்ற சமயங்களில்தான் விமானத்தில் அவசர ஆக்சிஜன் முகமூடிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், உலகில் எந்த விமானமும் 1,000 அடிக்கு குறைவாக பறக்கவும் அனுமதியில்லை.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories