Tap to Read ➤

ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் இந்திய ரயில்வே திட்டம்!

இந்த திட்டத்திற்கான ஒதுக்கீடு மதிப்பு எவ்வளவு தெரியுமா ?
Sidhanathan K
டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத் ரயில் நிலையங்கள் நவீன தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புகளுடன் விரைவில் புதிய தோற்றம் பெற உள்ளது.
இந்த மூன்று முக்கிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் இந்திய ரயில்வேயின் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 199 ரயில் நிலையங்களின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத் ரயில் நிலையங்கள் முதற்கட்டமாக நவீனமயமாக்கப்படும்.
அதன்பின், இரண்டாம் கட்டமாக, 10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் ரயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும்.
இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகளில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட தென் மாநிலங்களின் ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் எனத் தெரிகிறது.