Tap to Read ➤

சாரைப் பாம்புகள் எவ்வளவு நீளம் வரை வளரும்?

ஆங்கில பெயர் Oriental Rat snake என்று குறிப்பிடுவர்! விவசாயத்திற்கும் சாரைப்பாம்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு?
varalakshmi n
பொதுவாக இந்தியாவில் பரவலாக இப்பாம்பு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது
இதன் தோற்றம் மனிதர்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கும்
இப்பாம்பு இனங்கள் விஷமற்ற வகையை சார்ந்தது,மிகவும் பயந்த சுபாவம் கொண்ட ஓர் உயிரினம்
வெளிர் மஞ்சள்,மஞ்சள் கலந்த பச்சை,பழுப்பு,கருப்பு போன்ற நிறங்களில் காணப்படுகிறது
பொதுவாக இனப்பெருக்க காலத்தில் (மார்ச் முதல் செப்டம்பர்) 8 முதல் 22 வரையிலான முட்டைகள் இடும்
சராசரியாக நீளம் 2.5 மீட்டர் அதிகபட்சமான 3.5 மீட்டர் வரை வளரும்
முட்டையிலிருந்து வெளிவரும் போது 32cm முதல் 47cm வரை இருக்கும்
பிரதான உணவு எலிகள் தான்,தவளை, ஓணான், வெளவால்,கோழி குஞ்சுகளை உணவாக உட்கொள்ளும்
உலகில் 3,500 பாம்பு இனங்களில்,250 இனங்கள் மட்டுமே விஷம் உள்ளவை
இந்தியாவில் உள்ள 300 வகை பாம்புகளில் விவசாயிகளுக்கு அதிகம் நன்மை பயப்பது இச்சாரைப்பாம்புகள் தான்
எலி விவசாயிகளுக்கு பயிரை சேதம் விளைவிக்கும் ஒரு பெரும் எதிரியாக விளங்குகிறது
குறிப்பாக நெல், நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது
ஒரு எலி வருடத்திற்கு சராசரியாக 10 கிலோ தானியங்களை உண்ணும்
ஒரு சாரைப்பாம்பு வருடத்திற்கு சராசரியாக 1000 எலிகளையாவது வேட்டையாடி உண்ணும்
ஆக ஒரே ஒரு சாரைப்பாம்பு உழவர்களுக்கு கிட்டதட்ட 10 டன் தானியங்களை உழவர்களுக்கு பாதுகாத்து குடுக்கிறது
இப்பாம்புகள் வளைக்குள்ளே சென்று எலிகளை பிடிக்கும் திறமை கொண்டது
விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் விஷமற்ற சாரைப்பாம்பினை மனிதர்களின் அறியாமையால் கொன்று அழித்து வருவது வேதனைக்கு உரிய விஷயம்