Tap to Read ➤
அடடே..!! வாழைப்பழத்தில் இத்தனை வகைகளா ??
வாழைப்பழத்தின் வகைகள் மற்றும் நன்மைகள்
Sidhanathan K
வாழைப்பழங்கள் வெவ்வேறு நிறங்கள், அளவுகள் மற்றும் சுவைகளில் கிடைக்கின்றன.
வாழைப்பழங்களில் 1,000 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன, அவற்றில் பாதி சாப்பிட முடியாதவை.
பழங்களிலேயே அதிக சத்து மிக்க
செவ்வாழைப்பழம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடியது ஆகும்.
இனிப்பு சுவையுள்ள
கற்பூர வாழைப்பழம்
மிக ருசியாக இருக்கும். இவை தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள் மற்றும் புண்களை விரைவில் குணப்படுத்தும்.
மலச்சிக்கலை குணப்படுத்திடும்
பச்சை வாழைப்பழம்
பித்தத்தை அதிகப்படுத்துவதால் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.
நேந்திரம்பழம்
கேரளத்திலும், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது. உடல் எடையை கூட்ட உதவுகிறது.
அதிக குளிர்ச்சி தன்மை கொண்ட
பேயன் பழம்
உடல் சூட்டை தணிக்கிறது. வயிற்று புண் மற்றும் குடல் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும்.
மலை வாழைப்பழத்தை
மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு சிறிது நேரம் கழித்து சாப்பிட்டு வந்தால், உடலின் இரத்த ஓட்டம் பெருகும்.
நீல ஜாவா வாழைப்பழங்கள்
சாப்பிடும்போது வெண்ணிலா ஐஸ்கிரீமைப் போன்ற சுவையுடன் மென்மையாக இருக்கும்.