ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கப்பட்டு தற்போது வரை கோலாகலமாக நடந்து வருகிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்க பதக்கங்களுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளது.
ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கத்தை வடிவமைக்கும் பொறுப்பு அதை நடத்தும் நகரத்தின் பொறுப்பாக இருப்பதால், போட்டியின் ஒவ்வொரு பதக்கத்திற்கும் தனிப்பட்ட தரம் உள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC), ஒலிம்பிக் போட்டிகளில் முதல் இடத்தைப் பிடித்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கங்கள் 494 கிராம் வெள்ளி மற்றும் சுமார் ஆறு கிராம் தங்கத்தால் முலாம் பூசப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
அதாவது, 26 ஜூலை 2024 ($28.14 USD/oz) நிலவரப்படி வெள்ளி புள்ளி விலையின் அடிப்படையில் ஒரு வெற்றியாளர் வெல்லும் பதக்கத்தின் விலை சுமார் 935 டாலர் (ரூ.78,000) ஆக இருக்கும்.
12 ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் விளையாட்டுப் போட்டிகளில், பதக்கத்தின் மதிப்பு சுமார் 765 டாலர் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கங்கள் எந்தவித முலாம் பூசாமல் திடமான வெள்ளியால் செய்யப்பட்டவையாகும்.
எனவே 500 கிராம் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் தயாரிக்க மூலப்பொருட்களின் அடிப்படையில் சுமார் 475 டாலர் (ரூ.40,000) செலவாகும்.
ஒலிம்பிக் போட்டிகளில் மூன்றாவதாக வருபவர்களுக்கு வழங்கப்படும் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம், முலாம் பூசப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இது95% செம்பு மற்றும் 5% துத்தநாகம் கொண்டது.
அந்தவகையில், ஒரு வெண்கல ஒலிம்பிக் பதக்கத்தை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருட்களின் அடிப்படையில் 3.90 டாலர் (ரூ.350) செலவாகும்.