Tap to Read ➤

டூத் பிரஷ் எத்தனை நாட்களில் மாற்றப்பட வேண்டும்?

தினமும் நாம் பயன்படுத்தும் டூத் பிரஷ் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் மாற்றுவது அவசியமாகும்
HTML Tamil
பற்களை சுத்தம் செய்வதற்காக தினந்தோறும் நாம் பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷை எப்போது மாற்ற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஒரு சிலர், பல மாதங்களாக டூத் பிரஷை மாற்றாமல், அப்படியே தொடர்ந்து பயன்படுத்தி வருவது உண்டு.
மேலும் சிலர், டூத் பிரஷ் முழுவதுமாக சேதமடையும் வரை அதனை தொடர்ந்து பயன்படுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.
டூத் பிரஷ்ஷிற்கு காலாவதி தேதி இல்லையென்றாலும், 3 மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷ் மாற்றப்பட வேண்டும்.
பழைய பிரஷ்ஷையே தொடர்ந்து பயன்படுத்தினால், பற்களில் படிந்துள்ள கரைகள் முழுவதுமாக அகற்றப்பட வாய்ப்பு குறைவு.
பழைய பிரஷ் மூலம் பற்கள் நன்றாக சுத்தம் செய்யப்படாத பட்சத்தில், வாய் துர்நாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகும்.
பழைய டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும் என்பதற்கான அறிகுறிகளாக இதனை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
டூத் பிரஷ்ஷின் முட்கள் ஒழுங்கற்ற நிலையில் சிதைந்து இருந்தால், டூத் பிரஷ் மாற்றப்படவேண்டும் என்ற அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.
வீட்டில் உள்ளவர்கள் யாராவது கடும் நோயால் பாதிக்கப்பட்டால், மற்ற அனைவரும் டூத் பிரஷ்ஷை மாற்றிக் கொள்வது நல்லது.
நீங்கள் பயன்படுத்திய டூத் பிரஷ்ஷை, வேறு யாராவது தவறுதலாக பயன்படுத்தினலும், புதிய டூத் பிரஷ்ஷை மாற்றிக் கொள்வது அவசியமாகும்.