Tap to Read ➤

ஆன்லைனில் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்ப்பது எப்படி !

ரேஷன் கார்டில் குழந்தை பெயர் சேர்க்க..!!
Sidhanathan K
இந்தியாவில் ஆதார் மற்றும் பான் அட்டையை போலவே மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று ரேஷன் கார்டு/ ஸ்மார்ட் கார்டு.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ரேஷன் கார்டு திருத்தம் செய்யவோ, பெயர் சேர்க்கவோ, நீக்கவோ அலையாமல் இருக்கும் இடத்திலிருந்து மாறுவது சாத்தியம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
குடும்ப அட்டையில் குழந்தையின் பெயர் சேர்க்க வேண்டுமானால், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், குழந்தையின் ஆதார் அட்டை (இருந்தால்), பெற்றோரின் ஆதார் அட்டை என அனைத்தும் கொடுக்க வேண்டும்.
புதிதாக திருமணமான பெண்ணாக இருந்தால், திருமணச் சான்றிதழ், அவரது ஆதார் அட்டை, பெற்றோரின் குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டையில் பெயர் நீக்கப்பட்டதற்கான சான்று போன்றவை அவசியம்.
இதற்காக https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்று இருக்கும்.
Go to the link
அதில் உறுப்பினரை சேர்க்க என்பதை தேர்வு செய்து, ரேஷன் அட்டையில் ஏற்கனவே பதிவு செய்த 10 இலக்க தொலைபேசி எண்ணை கொடுத்து, கேப்ட்சா குறியீட்டினை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். ஓடிபியினை கொடுத்து கிளிக் செய்தால் அது மற்றொரு பக்கத்திற்கு செல்லும்.
அதில் ஏற்கனவே குடும்ப உறுப்பினர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். அந்த விவரங்களுக்கு கீழாக குடும்ப உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்யவும்.
அதில் name என்ற இடத்தில் கேப்பிட்டல் லெட்டரில் ஆங்கிலத்தில் பெயரை கொடுக்கவும். அதன் பிறகு பெயர் என்ற இடத்தில் தமிழில் பெயரை கொடுக்கவும். அதன் பிறகு பாலினம், பிறந்த தேதி, உறவு முறை அனைத்தையும் உள்ளிட வேண்டும்.
அடுத்ததாக ஆதார் நம்பர் கொடுத்து ஆதாரினை ( குறைந்தபட்சம் 1 MB) பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்த பிறகு உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு நீங்கள் கொடுத்த விவரங்களை ஒரு முறைக்கு இரு முறை பார்த்து, உறுதிபடுத்தல் என்ற பாக்ஸினை கிளிக் செய்து, பதிவு செய் என்பதை கொடுக்க வேண்டும்.
எல்லா படிகளையும் முடித்த பின்னர் உங்களது கோரிக்கை வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது என குறிப்பு எண் ஒன்று வழங்கப்படும். இதனை ஸ்கீரி ஷாட் அல்லது பிடிஎஃப் ஆக எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த குறிப்பு எண் எல்லாவற்றுக்கும் பயன்படும். அந்த குறிப்பு எண்ணை ஒரு 15 நாளில் இருந்து 30 நாட்களுக்குள் https://www.tnpds.gov.in/ முகப்பு பேஜ்க்கு சென்று பார்த்து அட்டை நிலவரம் தெரிந்து கொள்ளலாம்.
அப்படி அனுப்பிய ஆவணங்கள், விவரங்கள் சரியென்றால் அதிகாரிகள் அதனை வெரிபிகேஷன் செய்து உங்களது முகவரிக்கு ரேஷன் கார்டினை அனுப்புவார்கள்.