Tap to Read ➤

ஆதார் சேவைக்கான அப்பாயின்மென்ட்டிற்கு ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?

ஆதாரில் திருத்தம் செய்ய இதை பாலோவ் பண்ணுங்க !
Sidhanathan K
ஆதார் சேவைக்கான அப்பாயின்மென்ட், பாஸ்போர்ட் சேவை மையம் போன்று டோக்கன்கள் மற்றும் காத்திருப்பு நாற்காலிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க அல்லது ஆதாரில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆன்லைன் அபாயின்ட்மென்ட் முன்பதிவு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி வங்கி அல்லது தபால் நிலைய வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை.
ஆன்லைன் அபாயின்ட்மென்டிற்கு முன்பதிவு செய்ய www.uidai.gov.in என்ற வெப்சைட்டிற்கு செல்லவும்.
Go to website
எனது ஆதார் (My Aadhaar) என்ற அப்சனில் தோன்றும் மெனுவில் இருந்து ஒரு சந்திப்பை பதிவுசெய்க (Book an Appointment) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு ட்ராப்டவுன் மெனுவில் இருந்து நகரம் மற்றும் இடத்தை தேர்ந்தெடுத்து அபாயின்ட்மென்டிற்கு தொடரவும் (Proceed to Book Appointment) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
பின்வரும் பக்கத்தில் மொபைல் எண் மற்றும் கேப்ச்சா கொடுத்து, ஜெனெரேட் OTP தேர்ந்தெடுத்து அதனை உள்ளிடவும்.
ஆதார் விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நாம் விரும்பும் தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்து இறுதியில் முன்பதிவு சந்திப்புக்கான டோக்கன் எண் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆபரேட்டர் பணிநிலையங்கள் ஒதுக்கப்பட்டு டோக்கன் எண் வழியாக வரிசை நகர்வு திரைகளில் காட்டப்படும்.
பதிவு இலவசம் என்றாலும் ஆதார் விவரங்களில் எந்தவொரு புதுப்பித்தலுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.