Sidhanathan K       Aug 20, 2023

ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி..?

பட்டா என்பது ஒருவருக்கு சொந்தமான நிலம் என்று வருவாய்த்துறையால் வழங்கப்படும் ஆவணமாகும்.

ஒரு நிலத்திற்கான பட்டா குறிப்பிட்ட காலத்திற்குள் வாங்காமல் விட்டால் பின்னாளில் சிக்கல் வரவும் வாய்ப்பு உள்ளது.

நீங்கள் ஒருவருடைய பெயரில் ஒரு சொத்தை வாங்கினால், அதை எளிதாக உங்கள் பெயருக்கு மாற்றலாம்.

பட்டா- பெயர் மாற்றம் அல்லது புதிய பட்டா வாங்குவதற்கு முதலில் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

Go to the Link

பின்னர் 'பட்டா மாறுதல் விண்ணப்பிக்க' அதில் (Apply Patta transfer) என உள்ள ஐகான்/லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். அது https://tamilnilam.tn.gov.in/citizen/ தளத்திற்கு செல்லும்.

பின்னர் அதில் மொபைல் எண்ணை கொடுத்து, அந்த எண்ணுக்கு எஸ்எம்ஸ் மூலம் வரும் ஓடிபி-ஐ கொடுத்து லாக்-இன் செய்ய வேண்டும்.

அதில் பயனர் பெயர், பெற்றோர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பாலினம், முகவரி உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்.

அதை தொடர்ந்து நிலம் அல்லது வீடு எந்த மாவட்டம், வட்டம், கிராமம், சார்பதிவாளர் அலுவலகம், ஆவணம் பதிவு செய்யப்பட்ட தேதி, ஆவணப் பதிவு எண், புல எண், உட்பிரிவு எண் போன்றவற்றை நில விவரங்களாக கொடுக்க வேண்டும்.

அதன் பின்னர் சொத்து பத்திரம், விண்ணப்பதாரரின் அடையாள சான்று, வசிப்பதற்கான இருப்பிட சான்று போன்றவற்றை இணைப்பு விவரங்களில் தர வேண்டும். டாக்குமெண்ட் வடிவில் இதனை ஆன்லைனில் அப்லோடு செய்ய வேண்டும்.

(அப்பா, அம்மாவிடம் வாங்கிய சொத்து என்றால் தானப்பத்திரம், விற்பனையில் வாங்கிய சொத்து என்றால் கிரையப் பத்திரம், உறவினர்களிம் இருந்து பாகமாக கிடைத்த சொத்து என்றால் பாகப்பிரிவினை பத்திரம்).

அதன் பின்னர், விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை கூகுள்பே, போன்பே , பேடி எம் உள்பட யுபிஐ மூலமாகவும் இணையவழியில் செலுத்தலாம்.

உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என்றால் விண்ணப்பக் கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும். உட்பிரிவுடன் பட்டா மாற்றம் என்றால் அதற்கான தொகை 400 ரூபாயும், விண்ணப்பக் கட்டணம் ரூ.60 சேர்த்து செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்திய பிறகு, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த தேதியைக் குறிப்பிட்டு விண்ணப்ப எண்ணுடன் விண்ணப்பம் பெறப்பட்டதாக விண்ணப்பதாரரின் அலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கப்படும்.

அத்துடன் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், சேவைக் கட்டணம் குறித்த விவரம், பட்டா மாறுதல் மனு தொடர்பாக புல விசாரணைக்கு வருவாய்த் துறை அலுவலர்களால் (கிராம நிர்வாக அலுவலர் / நிலஅளவர்) தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று எஸ்எம்எஸ் வரும்.

மேலும், விண்ணப்பத்தின் நிலையை https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற தளத்திற்கு சென்று விண்ணப்ப எண்ணை கொடுத்து அறிந்து கொள்ளலாம்.

Go to the link

பட்டா 15 நாட்களில் அதிகபட்சம் 30 நாட்களில் உங்களுக்கு ஆன்லைனில் வந்துவிடும். அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories